ஒரு பத்திரம்

செப்ரெம்பர் 7, 2006

தமிழீழ ஆட்பதிவுத்திணைக்களத்தினால் வெளியிட்ட தமிழீழ தேசிய ஆள் அடையாள அட்டை பெறுவது தொடர்பான விளக்கக்கையேடு

Filed under: Government of Tamil Eelam,LTTE,War of Tamil Eelam — CAPitalZ @ 3:12 முப

01.ஏன்?
தமிழர் தாயகப்பிரதேசங்களில் வாழும் மக்களினைப் பதிவு செய்து ஆள் அடையாள அட்டையினை பெறுவதன் மூலம் மக்களின் அன்றாடத் தேவைகளின் போது தம்மை அடையாளப்படுத்தவும் தமது செயற்பாட்டினை இலகுவாக்கவும் உதவுதல்.

02.யாருக்கு?
தமிழீழத் தாயகப்பிரதேசத்தில் நிரந்தரமாக வாழுகின்ற அனைவருக்கும் ஆகும். முதற்கட்டமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களினை வாழ்விடமாகக்கொண்டவர்களுக்கு வழங்கப்படும்.

03.வயது எல்லை உண்டா?
ஆம், 16 அகவை நிறைவு செய்த அனைவருக்கும்.

04.அவசியமானதா?
ஆம். இப்போதைய நிலையில் இது அவசிய ஆவணமாகும்.

05.எங்கே தொடர்பு கொள்வது?
அ. மனிதவளப்பிரிவு(பிரதேச செயலகம்)
ஆ. பிரதேசப்போக்வுரத்துக்கண்காணிப்புப்பிரிவு
இ. இதற்கென அமைக்கப்பட்ட சிறப்பு பிரதேச கருமபீடம்

06.எவ்வாறு வேண்டுகை செய்வது?
அ. மனிதவள பதிவு இல்லாதவிடத்து குடும்ப பதிவு செய்யப்பட்டுள்ள குடும்பங்களினைச்சேர்ந்த வயது வந்த அங்கத்தவர்களில் ஒருவர் நேரடியாக விளக்கம் 05 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவதொரு கருமபீடத்திற்குச்சென்று மனிதவள அட்டை இல்லாதவிடத்து குடும்ப பதிவு அட்டையினை சான்றாகக்காட்டி வேண்டுகையைப்பெற்றுக்கொள்ளலாம்.

ஆ. வயது வந்த ஒவ்வொருவரும் தனித்தனியாக வேண்டுகையிடப்படல் வேண்டும்.

இ. வேண்டுகையுடன் கீழ்க்குறிப்பிடப்படும் ஆவணங்களின் சான்றுப்பத்திரங்களும் வர்ண புகைப்படங்களும் இணைக்கப்படவேண்டும்.

01. மனிதவளப்பதிவு அட்டை இல்லாதவிடத்து குடும்பப்பதிவு அட்டையின் நிழற்பிரதி
02. பிறப்பு சான்றுப்பத்திரம் (மூலப்பிரதி)
03. திருமணச்சான்றுப்பத்திரம் (நிழற்பிரதி)
04. வேண்டுகையாளரின் புகைப்படம்
அ. 10ஓ15(உஅ) கலர்படம் -01தனி
ஆ. 2.5ஓ3.25(உஅ) கலர்படம் 03தனி

குறிப்பு:
இ. இவ் ஆவணங்களின் மூலப்பிரதிகளை வேண்டுகையை பொறுப்பேற்கும் அலுவலகர் பரிசீலிப்பதற்கு கொண்டு செல்லல் வேண்டும்.
ஈ. புகைப்படங்கள் யாவும் பின்னணி சிவப்பு நிறத்தைக்கொண்டதாகவும் நேர் பார்வையுடையதாகவும் இருப்பதுடன் தமிழீழ ஆட்பதிவுத்திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படக்கலையகத்தில் எடுக்கப்பட்டதாகவும் இருக்கவேண்டும்.

07. கேட்கப்படும் ஆவணங்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் உறுதிப்படுத்தும் தகமையுடையோர் யார்?
01. மனிதவள அலுவலர்
02. கிராம அலுவலர்
03. தமிழீழ சமாதான நீதியாளர்
04. திருணமப்பதிவாளர் (திருமணச்சான்றுக்கு மட்டும்)
05. பாடசாலை அதிபர்
06. தமிழீழ ஆட்பதிவுத்திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கிராமத்தலைவர்கள்.

08. வேண்டுகை உறுதிப்படுத்தப்படவேண்டுமா? யாரால்?
ஆம். வேண்டுகையாளரின் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள கீழ்வரும் அலுவலர்களில் ஒருவர் வேண்கையினையும் ஆவணங்களினையும் உறுதிப்படுத்தலாம்.
01. மனிதவள அலுவலகர்
02. பாடசாலை அதிபர்(மாணவர்களுக்கு மட்டும்)
03. தமிழீழ ஆட்பதிவுத்திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கிராமத்தலைவர்கள்

09. கட்டணம் செலுத்த வேண்டுமா?
ஆம். ஒவ்வொரு வேண்டுகையுடனும் உரூபா 200 ற்கான பற்றுச்சான்று இணைக்கப்படல் வேண்டும்.

10. கட்டணத்தினை எவ்வாறு?, எங்கே செலுத்த வேண்டும்?
தமிழீழ வைப்பத்தில் எண் 10079 சேமிப்புக்கணக்கில் உரூபா 200 வைப்பிலிட்ட சான்றுத்துண்டு அல்லது தங்கள் பிரதேசத்தில் உள்ள வேண்டுகை பொறுப்பேற்கும் அலுவலகரிடம் உரூபா 200 செலுத்திய சான்றுத்துண்டு அல்லது தமிழீழ ஆட்பதிவுத்திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக நிலையத்தில் உரூபா 200ஃஸ்ரீ செலுத்திய சான்றுத்துண்டை வேண்டுகையுடன் இணைக்கவேண்டும்.

11. யாரிடம்? எங்கே? வேண்டுகையை சமர்ப்பிப்பது?
தங்கள் பிரதேச போக்குவரத்துக் கண்காணிப்பு பிரிவு அலுவலத்திலுள்ள தமிழீழ தேசிய அடையாள அட்டைப்பகுதியில் அல்லது இதற்கென சிறப்பாக அமைக்கப்பட்டுள்ள தமிழீழ தேசிய ஆள் அடையாள அட்டை அலுவலகத்தில் வேண்டுகையினைச் சமர்ப்பித்து பொறுப்பு ஏற்றமைக்கான பற்றுச்சான்றுடன் கூடிய தற்காலிக ஆள் அடையாள அட்டையினை அலுவலகரிடம் பெற்றுக்கொள்ளவேண்டும்.

குறிப்பு:
வேண்டுகை பொறுப்பேற்கும் நாளினை விளக்கம் 05 இல் குறிப்பிடப்பட்ட அலுவலகங்களில் உள்ள விளம்பரப்பலகை அறிவித்தல் மூலம் தெரிந்து கொள்க.

12. ஆள் அடையாள அட்டை எப்போது கிடைக்கும்?
தங்கள் வேண்டுகையைப்பெற்றுக்கொண்ட அலுவலர் தங்களுக்கு வழங்கும் பற்றுச்சான்றில் அடையாள அட்டை வழங்கப்படக்கூடிய உத்தேச நாளினைக்குறிப்பிட்டு வழங்குவார். உத்தேச நாளில் தொடர்பு கொண்டு சரியான நாளி;னைக்குறித்த அலுவலகரிடம் அல்லது அலுவலக விளம்பரப்பலகையிலுள்ள அறிவித்தல் மூலம் அறிந்து ஒவ்வொருவரும் நேரடியாக சமூகம் தந்து தங்களுக்குரிய ஆள் அடையாள அட்டையைப்பெற்றுக்கொள்ளவேண்டும்.

13. அடையாள அட்டையின் பயன்பாடு யாது?
01. தனிமனித அடையாளத்தினை உறுதிப்படுத்துதல்
02. பாதுகாப்பு சோதனைகளின் போது உறுதிப்படுத்துதல் ஆவணமாகப்பயன்படுத்தல்
03. தமிழீழ தாயகத்தில் உள்ள மக்கள் தமது நாளாந்த தேவைகளுக்கான அடையாள ஆவணமாக பயன்படுத்துதல்.

14. ஆள் அடையாள அட்டை தொலையும் சந்தர்ப்பத்தில்
ஆள் அடையாள அட்டை தொலைந்ததிலிருந்து 07 நாட்களுக்குள் அருகிலுள்ள தமிழீழ காவல்துறை பணியகத்தில் முறைப்பாடு செய்யப்படவேண்டும். இதன் பின் ஆ வேண்டுகையை பூர்த்தி செய்து உரூபாய் 600 செலுத்திய பற்றுத்துண்டுடன் காவல்துறை அதிகாரி மூலம் உறுதிப்படுத்தி வேண்டுகையிடப்படல் வேண்டும்.

குறிப்பு:
இரண்டாவது தடவை தொலையுமிடத்து உரூபாய் 5000ஃஸ்ரீ செலுத்திய பற்றுச்சான்றுடன் காவல்துறை அதிகாரியிடம் உறுதிப்படுத்துவதுடன் குற்றப்பணமும் செலுத்தவேண்டும்.

15. புகைப்படம் எடுத்தல்
தமிழீழ தேசிய ஆள் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் உரிமை பொற்காலம் வண்ணப்புகைப்படக்கலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் பத்திரிகை விளம்பரம் மூலம் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் வருகை தந்து புகைப்படம் எடுப்பதுடன் அவ்வவ் இடங்களிலேயே படங்களையும் ஒரு வாரத்துக்குள் தருவார்கள். ஒவ்வொரு பிரதேசத்திலும் மூன்று நாட்கள் புகைப்படம் எடுக்கப்படும். இதில் தறவிடும் வேண்கையாளர்கள் கிளிநொச்சியில் அல்லது முல்லைத்தீவில் அமைந்துள்ள பொற்காலம் வண்ணப்புகைப்படக்கலையகத்தில் எடுக்கலாம் அல்லது வேறு பிரதேசங்களில் இவர்கள் வந்து படம் எடுக்கும் போதும் எடுக்கலாம். நான்கு படத்துக்குமான கட்டணமாக உரூபாய் 80ஃஸ்ரீ இப்போதைய சூழலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

16. தமிழீழ தேசிய அடையாள அட்டைக்கான பிரதேச அலுவலகங்கள்

01. புதுக்குடியிருப்பு
02. விசுவமடு
03. தண்ணீருற்று
04. முல்லைத்தீவு
05. கனராயன்குளம்
06. புளியங்குளம்
07. நெடுங்கேணி
08. ஒட்டுசுட்டான்
09. கிளிநொச்சி
10. பளை
11. மருதங்கேணி
12. வட்டக்கச்சி
13. மல்லாவி
14. அக்கராயன்
15. பூநகரி
16. முழங்காவில்
17. விடத்தல்தீவு
18. தட்சனாமருதமடு
19. ஆண்டாங்குளம்

 

மூலம்:

அடையாள அட்டை

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: