ஒரு பத்திரம்

செப்ரெம்பர் 7, 2006

இலங்கையின் புனரமைப்பு அபிவிருத்தி மீதான டோக்கியோப் பிரகடனம் (2003 யூன் 10)

Filed under: LTTE,Politics,Sri Lanka,War of Tamil Eelam — CAPitalZ @ 3:41 முப


In Englishமாநாடு பற்றிய சுருக்கமான விளக்கம்

1. 51 நாடுகள் மற்றும் 22 சர்வதேச ஸ்தாபனங்களின் அமைச்சர்கள், பிரதிநிதிகள் கலந்து கொண்ட இலங்கையின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி மீதான மாநாடு டோக்கியோவில் ய10ன் மாதம் 9ஆம் 10ஆம் தேதிகளில் நடைபெற்றது. பங்குபற்றிய நாடுகள் மற்றும் சர்வதேச ஸ்தாபனங்களின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. யப்பானியப் பிரதம மந்திரி திரு. ஜூனிசீரோ கொயிஸ_மி, இலங்கைப் பிரதம மந்திரி திரு. ரணில் விக்கிரமசிங்கா ஆகியயோர் ஆரம்ப உரைகளை இங்கு நிகழ்த்தினர். யப்பானிய அரசின் பிரதிநிதி திரு. யசூசி அகாசி அங்குரார்ப்பணக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.

2. இம்மாநாட்டின் இணைத் தலைவர்களாக யப்பான், நோர்வே, ஐக்கிய அமெரிக்கக் குடியரசு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (தலைமைப்பீடமும் ஆணைக்குழுவும்) செயற்பட்டன. இணைத் தலைமைப் பீடங்களின் பிரிதிநிதிகளான யப்பானிய வெளிவிவகார அமைச்சர் செல்வி யோரிக்கோ கவகூச்சி; நோர்வே வெளிநாட்டமைச்சின் ராஜாங்க காரியதரிசி திரு. ஓலாவ் கஜஒ- எர்வென், ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் பிரதி ராஜாங்க காரியதரிசி திரு. ரிச்சர்ட் ஆர்மிடேஜ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப்பீடத்தை பிரதிநிதித்துவப்படுத்திய திரு.ஐயோனிஸ் தியோபனாபொலஸ், ஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதிநிதி திரு. பேர்னார்ட் செப்டர் ஆகியோர் ஆரம்பக் கூட்டத் தொடரின் போது அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர். ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் திரு.தடாஓ சினோவும் இக்கூட்டத்தின் போது உரை நிகழ்த்தியதோடு அதனைத் தொடர்ந்து உலக வங்கித் தலைவர் திரு. ஜேம்ஸ் வுல்பென்சொனின் விடியோ செய்தியொன்று ஒளிபரப்பப்பட்டது.

3. செயற்பாட்டுக் கூட்டத்தின் போது, இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர், திரு. ஏ.எஸ். ஜயவர்த்தனா இலங்கையின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் வாய்ப்புக்கள் பற்றிய அறிக்கையினைச் சமர்ப்பித்தார். இலங்கையின் சர்வாங்கப் பொருளாதாரச் செயற்பாடு மற்றும் புனரமைப்பு அபிவிருத்திக்கான நிகழ்ச்சி நிரல் பற்றிய அறிக்கையினை சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் இணைந்து சமர்ப்பித்தன. இலங்கை அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்ரீரீஈ) ஆகிவற்றுடன் விரிவாகக் கலந்தாலோசித்து உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு ஆகியவற்றுக்கான தேவைகள் மதிப்பீடு ஒன்றினை ஆசிய அபிவிருத்தி வங்கியும் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பும் மீள்பரிசீலனை செய்தன. இச்செயற்பாட்டின் போது சிவில் சமூக அமைப்புக்களின் கருத்துக்களும் பெறப்பட்டன.

4. முழுமையான கூட்டத்தொடரில் கலந்து கொண்ட நாடுகள் சர்வதேச ஸ்தாபனங்கள் என்பன இலங்கைக்குப் பொருளாதார உதவியை வழங்குவதற்கான தம் எண்ணத்தை எடுத்துக்காட்டும் விதத்திலான அறிக்கைகளைச் சமர்ப்பித்தன. நாட்டின் அபிவிருத்தி நோக்கங்களுக்கான சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தனியார்; முயற்சிகளின் பங்களிப்புக்கள் பற்றிய சமர்ப்பனங்கள் அங்கு முன்வைக்கப்பட்டன.

இலங்கைச் சமாதானச் செயற்பாட்டின் வரலாறு

5. கடந்த இரு தசாப்தங்களாக நடைபெற்று வந்த ஆயுதந்தாங்கிய மோதல் 65,000க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்டுள்ளதோடு 800,000 க்கும் அதிகமானோரை நாட்டினுள்ளே இடம் பெயரச் செய்து வடக்கிலும் கிழக்கிலும் அதிக எண்ணிக்கையிலான அகதிகளையும் தோற்றுவித்துள்ளது. இலங்கை சனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்கவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரனும் சமாதானப் பேச்சுவாத்தைகளுக்கான பாரபட்சமற்ற நடுவராகச் செயற்படுமாறு நோர்வைக்கு விடுத்த அழைப்பைத் தொடர்ந்து தற்போதைய சமாதானச் செயற்பாடு 2000 இல் ஆரம்பமாகியது. நோர்வையின் அனுசரணையுடன் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பரஸ்பர யுத்த நிறுத்த ஒப்பந்தத்தினை 2002 பெப்ரவரி மாதம் 23 ஆம் தேதி ஏற்படுத்திக் கொண்டனர். 2002 செப்டம்பர் தொடக்கம் இரு கட்சிகளுக்குமிடையே ஆறு கூட்டத் தொடர்கள் நடைபெற்றுள்ளதோடு அவற்றின் போது கணிசமான அளவு முன்னேற்றமும் காணப்பட்டது. 2002 நவம்பர் 25 ஆம் தேதி ஒஸ்லோவில் கூடிய பங்காளி நாடுகளும் சர்வதேச ஸ்தாபனங்களும் சமாதானச் செயற்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்குமுகமாக உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்க உறுதி அளித்தன. டோக்கியோவுக்கு முன்கூட்டி வாசிங்டனில் 2003 ஏப்பிரலில் ஐக்கிய அமெரிக்கக் கூடியரசின் ராஜாங்க அமைச்சரின் தலைமையின் கீழ் கருத்தரங்கொன்று நடாத்தப்பட்டது. டோக்கியோ மாநாட்டுக்கான அரசியல் உத்வேகத்தைத் தூண்டுவதே அதன் நோக்காக இருந்தது.

மாநாட்டின் நோக்கங்கள்

6. இலங்கையின் புனரமைப்புக்கும் அபிவிருத்திக்கும் உறுதியான ஒன்றிணைந்த பொறுப்பை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தைச் சர்வதேச சமூகத்துக்கு வழங்குதையும் சமாதானச் செயற்பாட்டில் மேலும் முன்னேற்றத்தைக் காண்பதற்காக தம் முயற்சிகளைப் பன்மடங்காக அதிகரிக்கச் சம்பந்தப்பட்ட கட்சிகளை ஊக்குவிப்பதையும் இம்மாநாடு நோக்கங்களாகக் கொண்டிருந்தது. சமாதானச் செயற்பாட்டில் சம்பந்தப்பட்ட கட்சிகளுள் ஒரு கட்சியினர் மாத்திரமே இம்மாநாட்டில் சமுகமளித்திருந்த வேளையிலும், வடக்கு மற்றும் கிழக்கில் செயலாக்கமுள்ள புனரமைப்பையும் அபிவிருத்தியையும் உறுதிப்படுத்துவதற்குத் தேவையான பரிபாலன அமைப்பை ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட கட்சியினருக்கு ஆதரவு வழங்குவதற்கான தம் உறுதிப்பாட்டை நிரூபிப்பதற்கானதொரு சந்தர்ப்பமாக இதனைச் சர்வதேச சமூகம் பயன்படுத்திக் கொண்டது. இப்பிரதேசங்களைப் பயனுறு விதத்தில் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பங்காளிகளாகச் செயற்பட வேண்டியுள்ளது. ஏனைய சகல சமூகங்களினதும் நலன்களைப் பேணிப் பாதுகாப்பதற்கான விதிகளும் இச்சட்டகத்தினுள் உள்ளடக்கப் பட வேண்டும்.

7. நாடு எதிர்நோக்கும் பொருளாதாரச் சவால்களை இம்மாநாடு கவனத்துக்கெடுத்துக் கொள்வதோடு அவை தொடர்பாக இலங்கையை சீரான மற்றும் நியாயமான அடிப்படையில் அபிவிருத்தி செய்ய விளையும் ப10ரண நடவடிக்கைத் திட்டமான இலங்கையை மீளப் பெறும் முயற்சியையும் அது ஆமோதிக்கிறது.

8. டோக்கியோ மாநாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் கலந்து கொள்ளாததையிட்டு அதில் பங்குபற்றியோர் கவலை தெரிவித்துள்ளனர்.; சமாதானச் செயற்பாட்டை தொடர்வதற்கான அதன் தீர்மானத்தை மீள உறுதிப்படுத்தி இலங்கையின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தியில் கவனஞ் செலுத்த இம்மாநாடு இலங்கை அரசுக்கு சந்தர்ப்பமொன்றை வழங்குகிறது.

சமாதானச் செயற்பாட்டின் சித்தியில் இம்மாநாட்டின் முக்கியத்தும்

9. இலங்கையில் பேச்சுவார்த்தைகளினூடாகப் பெறப்படும் தீர்வு ஆயுதந்தாங்கிய மோதலொன்றைச் சமாதானமான முறையில் தீர்ப்பது என்ற வகையில் முக்கியமானதொரு சம்பவமாக இருக்கும் என பங்குபற்றியவர்கள் கருதுகின்றனர். ஐக்கிய இலங்கையினுள் சம~;டி அமைப்பொன்றின் அடிப்படையிலான நிரந்தர மற்றும் பேச்சு வார்த்தைகளினூடாகப் பெறப்படும் சமாதானத்தை அடைவதற்காக இரு கட்சியினரும் கொண்டிருக்கும் உறுதிக்காக அவர்களை இம்மாநாடு மெச்சுகிறது. மேலும், சமாதானத்தினூடாகப் பெறப்படும் இலாபங்களை நுகரக்கூடிய விதத்தில் இலங்கையில் வாழும் சகல மக்களுக்கும் அவற்றை வழங்குவதன் முக்கியத்துவத்தையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.

சீரான மனிதாபிமான மற்றும் பொருளாதார உதவி

10. வடக்கு மற்றும் கிழக்கில் மோதலினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கான அவசர மனிதாபிமான உதவி அத்துடன் மத்திய கால நீண்ட கால உதவியுடன் முழு நாட்டையும் அபிவிருத்தி செய்வதற்கான உதவி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இம்மாநாடு கருத்திற்கொண்டுள்ளது. உதவி வழங்கும் போது நுண்மையான இன மற்றும் பிரதேச சமபாட்டினை முழுமையாகக் கவனத்துக்கெடுத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. மோதலினால் தாக்கமடைந்துள்ள பிரதேசங்களின் தேவைகளை இனங்காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கின் தேவைகள் மதிப்பீட்டினை இம்மாநாடு வரவேற்கிறது. இம்மாநாட்டுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையை மீளப் பெறுதல், வடக்கு மற்றும் கிழக்குக்கான தேவைகள் மதிப்பீடு, வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களை அடுத்துள்ள மோதலுடன் தொடர்புபட்ட மாவாட்டங்களுக்கான தேவைகள் மதிப்பீடு ஆகியன தொடர்பான மூலவள ஆவணங்கள் மற்றும் தேவைகள் மதிப்பீடு அத்துடன் இலங்கையை மீளப் பெறுதல் ஆகியவற்றை இணைக்கும் இணைப்பு ஆவணம் என்பனவற்றின் அடிப்படையில் இலங்கைக்கு உதவி வழங்க உதவி வழங்கும் சமூகம் அதன் விருப்பத்தைத் தெரிவிக்கிறது.

உதவி வழங்குவோர் தெரிவித்துள்ள ஆதரவு

11. 2003 முதல் 2006 வரையிலான 4ஆண்டு காலப்பகுதியில் 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான மதிப்பீடு செய்யப்பட்ட திரண்ட தொகையொன்றினை நாடு முழுவதற்குமான உதவியாக வழங்குவதற்குத் தம்முடைய விருப்பத்தை பங்குபற்றிய உதவி வழங்கும் நாடுகளும் சர்வதேச ஸ்தாபனங்களும் குறித்துரைத்துள்ளன. மேலும், சில நாடுகளும் சர்வதேச ஸ்தாபனங்களும் தொழில்நுட்ப உதவியையும் வழங்க முன்வந்துள்ளன அத்துடன், ஏனையோர் சமாதானச் செயற்பாடு வெற்றியடையும் என்ற ஊகத்தின பேரில் அவர்களின் உறுதிப்பாடுகளை குறிப்பிட்டனர்.

12. பல நாடுகளும் சர்வதேச ஸ்தாபனங்குளம் தமது உதவியின் கணிசமான அளவினை வடக்கு மற்றும் கிழக்குக்கென குறிப்பிட்டுள்ளனர். சமாதானச் செயற்பாட்டின் திருப்திகரமான முன்னேற்றத்தைப் பொறுத்தே அத்தகைய உதவி வழங்கப்படும் என அவர்களுள் பலர் குறிப்பிட்டுள்ளதோடு, அத்தகைய முன்னேற்றத்தைக் கவனத்திற்கொண்டு மேலதிக உறுதிப்பாடுகளை ஆராயாத் தயாராக இருப்பதாக ஏனையோர் குறிப்பிட்டனர்.

வடக்கிற்கு மற்றும் கிழக்கிற்கு உதவியை அனுப்பும் வழிகள்

13. மனிதாபிமான நிவாரணத்துக்கு ஆதரவு வழங்கவும் மனித உரிமைகளின் பாதுகாக்கவும் சர்வதேசச் சமூகம் உறுதிப10ண்டுள்ளது. அத்துடன். அது வடக்கு மற்றும் கிழக்கு ஆகியவற்றின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்கான புதுமையானதொரு பரிபாலன அமைப்பு மீதான இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட கட்சியினரை ஊக்குவிப்பதற்காக இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறது. இத்தேவைக்காக இக்கட்சிகளுடன் ஒத்துழைப்பதற்கான அதன் ஈடுபாட்டையும் சர்வதேச சமூகம் வலியுறுத்துகிறது. இவ்வமைப்பு இலங்கையில் மீளிணக்கப்பாட்டுச் செயற்பாட்டுக்கான பங்களிப்பையும் சுயமாகவே வழங்கும். உள்நாட்டு மற்றும் சர்வதேச அரச சார்பற்ற ஸ்தாபனங்களின் ஒத்துழைப்புடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு வழிகள் மூலம் வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்கனவே சில மனிதாபிமான உதவிக் கருத்திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன என்பதை திருப்தியுடன் இம்மாநாடு இனங்கண்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு ஆகியவற்றுக்கு உதவியை வழங்குவதற்கான பிரதான மார்க்கமாக உலக வங்கியினால் நிருவகிக்கப்படவுள்ள வட-கிழக்கு புனரமைப்பு நிதியம் (Nநுசுகு) அமைக்கப்பட்டதையும் இம்மாநாடு வரவேற்கிறது. உதவி வழங்கும் சமூகத்திடமிருந்து உதவியைப் பெற்றுக் கொள்வதில் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் வளைந்து கொடுக்க வேண்டியதன் அவசியத்தை இம்மாநாடு அழுத்தமாக எடுத்துரைக்கிறது. இவ்வுதவியினால் ஆதரவு வழங்கப்பட்ட கருத்திட்டங்களைப் பொறுப்புடன், வெளிப்படையாக, வேகமாகவும் வினைத் திறனுடனும் அமுலாக்கப்படுவதை உறுதி செய்து நல்லாட்சி முறையை மேம்படுத்தும் ஆளுமையைக் கட்டியெழுப்புவதற்காக உதவி வழங்குவதற்கான விருப்பத்தையும் உதவி வழங்கும் சமூகம் வெளிப்படுத்துகிறது.

உறுதியான மற்றும் வளர்ச்சி சார்ந்த பாரிய பொருளாதாரக் கொள்கை

14. இலங்கையை மீளப்பெறல் திட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்ட உறுதியான பாரிய பொருளாதாரக் கொள்கையை இலங்கை அரசு அமுல் செய்வதன் முக்கியத்துவம் பற்றி இம்மாநாடு கவனம் செலுத்துகிறது. அத்துடன், வறுமையைக் குறைப்பதை நோக்காகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளை மேற்கொள்வதன் அவசியத்தையும் இம்மாநாடு வலியுறுத்துகிறது. பொருளாதார வளர்ச்சி, தொழில் உற்பத்தி அத்தோடு தனியார் முயற்சியினை ஊக்குவித்தல் ஆகியவற்றில் நிலைதகவுள்ள அபிவிருத்தி தங்கியுள்ளது.

சமாதானச் செயற்பாட்டின் முன்னேற்றம்

15. கடந்த கால சமாதானப் பேச்சுத் தொடர்களின் போது கணிசமான அளவு முன்னேற்றம் காணப்பட்டதென்பதை இம்மாநாடு கவனத்துக்கெடுத்துள்ளது. ஒஸ்லோ பிரகடனத்தில் பிரதிபலிக்கும் கோட்பாடுகளின் மேல் நிறுவப்பட்ட சமாதானச் செயற்பாட்டை மேலும் மேம்படுத்துவதற்காக தம்மாலான சகல முயற்சிகளையும் இரு கட்சியினரும் மேற்கொள்வதன் முக்கியத்துவத்தை இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் உதவி வழங்குவோர் நினைவ10ட்டுகின்றனர். மோதலினால் தாக்கமடைந்த வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு ஆதரவு வழங்குவதின் அவசரத் தேவையை உதவி வழங்குவோர் இனங்கண்டுள்ளதோடு இத்தேவைக்கான ஒதுக்கீடுகளைச் செய்யவும் முன்வந்துள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கைப் பொறுத்தவரையில், சகல சமூகங்களினதும் நலன்களைப் பேண போதியளவு பாதுகாப்புடன் முன்னுரிமைத் தெரிவு மற்றும் கருத்திட்ட அமுலாக்கம் ஆகியவை அரசு அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் இணைந்த செயற்பாடாகவிருக்கும். வடக்கு மற்றும் கிழக்கின் புனரமைப்பு அத்துடன் அபிவிருத்திக்காக உதவி வழங்குவோர் சமூகத்தினால் உறுதியளிக்கப்பட்ட உதவியினை குறிப்பாக அத்தேவைக்காக பிரயோகிக்கப்படுவதை அரசாங்கம் உறுதிப்படுத்தும் என இம்மாநாடு எதிர்பார்க்கிறது.

16. நிரந்தரமானதும் நியாயமானதுமானதொரு அரசியல் தீர்வை வேகமாக அணுகுமாறு இக்கட்சியினரை இம்மாநாடு தூண்டுகிறது. அத்தகையதொரு தீர்வானது மனித உரிமைகள், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான கோட்பாடுகள் ஆகிவற்றை மதிக்கும் அடிப்படையில் இருத்தல் வேண்டும். இது தொடர்பாக, ஹகோனேயில் நடைபெற்ற ஆறாவது சமானதாப் பேச்சுத் தொடரின் போது கலந்துரையாடிய பிரகாரம் மனித உரிமைகள் பிரகடனம் மீதான துரித இணக்கப்பாட்டை இக்கட்சியினர் காண்பர் என இம்மாநாடு எதிர்பார்க்கிறது.

17. பேச்சுவார்த்தைகளினூடான சமாதானச் செயற்பாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள்ள ஈடுபாட்டை இம்மாநாடு வரவேற்பதோடு இயன்றவரை அவசரமாகப் பேச்சு வார்த்தைகளை மீண்டும் தொடருமாறு தமிழீழ விடுதலைப் புலிகளை அது ஆர்வமூட்டுகிறது. மோதலினால் பாதிப்படைந்த வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு உடனடியாக சமாதானத்தின் பிரதிபலன்களை அனுபவிக்கும் வாய்ப்புக் கிட்ட வேண்டும். மோதலினால் பாதிப்படைந்த வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்திக்காக சர்வதேச உதவிக்கான ஏற்பாடுகளுக்கு இயைவாகச் சமாதானச் செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு இலங்கை அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தெளிவான ஈடுபாடு அவசியமாகும்.

உதவி வழங்குவோரின் ஆதரவு மற்றும் சமாதானச் செயற்பாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றுக்கிடையிலான இணக்கப்பாடு

18. ஒஸ்லோவில் கட்சியினரால் இணக்கம் காணப்பட்ட நோக்கங்களை அடைவதற்காகச் சமாதானச் செயற்பாட்டில் எய்தப்பெறும் கணிசமான மற்றும் சமாந்தரமான முன்னேற்றத்துக்கும் உதவி வழங்குவோர் சமூகத்தினால் வழங்கப்படும் உதவிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருத்தல் வேண்டும். நடைமுறை தொடரும் போது புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி அம்சங்களை முகாமைப்படுத்துவதற்கான தற்காலிக பரிபாலான அமைப்பொன்றைப் பற்றிக் கால தாமதமின்றிப் பேச்சுவார்த்தை நடாத்துமாறு இம்மாநாடு இலங்கை அரசையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் உற்சாகமூட்டுகிறது. இரு தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய இறுதித் தீர்வை அடைதவதற்கான தெளிவான கட்டங்களைக் கொண்ட பாதை விளக்கமொன்றை அவசரமாக அபிவிருத்தி செய்வது இச்செயற்பாட்டுக்கு இன்றியமையாததாகும். இதனைக் கருத்திற்கொண்டு, பின்வருவனவற்றை உள்ளிட்டு குறிப்பாக நோக்கங்கள் மற்றும் விசேடக் கட்டங்கள் தொடர்பில் சமாதானச் செயற்பாட்டின் முன்னேற்றத்தை உண்ணிப்பாகக் கண்காணிப்பதற்கு சர்வதேச சமூகம் நாடுகிறது:

அ. இரு கட்சியினரும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாக அனுசரித்து நடத்தல்.

ஆ. வடக்கு மற்றும் கிழக்கில் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான பயனுறு வழங்கல் வழிமுறை.

இ. தாய்லாந்தில் நடைபெற்ற சமானதாப் பேச்சுக்களின் நாலாம் தொடரின் பிரகடனத்தில் தீர்மானித்தபடி முஸ்லிம் தூதுக்குழுவொன்று கலந்துகொள்ளல்.

ஈ. ஒஸ்லோ பிரகடனத்தின் கோட்பாடுகளின் அடிப்படையில் இறுதியான அரசியல் தீர்வொன்றை நோக்கி சமாந்தரமாக முன்னேறுதல்.

உ. ஆயுதந்தாங்கிய மோதலினால் இடம்பெயர்ந்தவர்களுக்கான தீர்வுகள்.

ஊ. சகல மக்களினதும் மனித உரிமைகளைச் செயலாக்கத்துடன் மேம்படுத்திப் பாதுகாத்தல்.

எ. அரசியல் மன்றங்களிலும் ஏனைய தீர்மானமெடுக்கும் மட்டங்களிலும் பெண்களின் சமத்துவமான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தும் வகையில் சமாதானத்தைக் கட்டியெழுப்பல், மோதலை மாற்றியமைத்தல் மற்றும் புனரமைப்புச் செயற்பாடு ஆகியவற்றில்; பாலியல் சமத்துவத்தையும் சமநிலையையும் பயனுறுவிதத்தில் உட்புகுத்தல்.

ஏ. யுனிசெவ் ஆதரவுடனான செயற் திட்டத்துக்கிணங்க வயது குறைந்தவர்களை அணிசேர்த்தலை நிறுத்தி மற்றும் வயது குறைந்தவர்களை விடுவித்து அவர்கள் புனர்வாழ்வுக்கும் சமூகத்துடன் மீள இணைப்பதற்குமான செயற்றிரனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

ஒ. ஆயுதந்தாங்கிய மோதலினால் அங்கவீனமுற்று அல்லது மனோதத்துவ ரீதியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள முன்னைய போராளிகள் அத்துடன் பொது மக்களுக்குப் புனர்வாழ்வளித்தல்.

ஓ. அரசியல் தீர்வொன்றை எய்துவது தொடர்பாக தோதான தருணத்தில் கட்ட அடிப்படையிலான, சீரான மற்றும் பரிசோதனைக்குட்படுத்தப்படக் கூடிய தணிப்பு நடவடிக்கைகள், இராணுவ சூன்ய நிலை அத்துடன் சகஜநிலைச் செயற்பாடு ஆகியவை மீது இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளல்.

சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தனியார் முயற்சிகளினால் கிட்டும் உட்பாய்ச்சல்கள்.

19. 2003 ஏப்பிரல் 26-27 ஆம் தேதிகளில் நடைபெற்ற சிவில் சமூக மற்றும் 2003 ய10ன் 8ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற்ற கூட்டங்களினால் கிடைக்கப் பெற்ற உட்பாய்ச்சல்களை இம்மாநாடு வரவேற்கிறது. இக்கட்சியினர் மேற்கொண்டுள்ள சவால்கள் அடங்கிய பொறுப்பில் வெற்றி அடைவதற்காக சிவில் அமைப்புக்களின் உத்வேகமும் தொடர்ச்சியான ஈடுபாடும் அவசியம் என இம்மாநாடு கருதுகிறது. தனியார் முயற்சியின் துடிப்புள்ள ஈடுபாடு இம்மாநாட்டுக்கு உற்சாகமூட்டுவதாயிருக்கிறது. கல்விமான்கள் சமூகம், தொழிற் சங்கங்கள், உயர்தொழில்சார் குழுக்கள் மற்றும் ஏனையோரின் பங்களிப்பையும் இம்மாநாடு மெச்சுகிறது.

கண்காணித்தல் மற்றும் மீளாய்வு

20. உதவி வழங்குவோர் வழங்கும் ஆதரவு மற்றும் சமாதானச் செயற்பாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றுக்கிடையிலான இணைப்பின் காரணமாக, சமாதானச் செயற்பாட்டின் முன்னேற்றத்தை சர்வதேச சமூகம் கண்காணித்து மீளாய்வு செய்யும். தமது உதவித் திட்டங்களைச் செயற்படுத்துவதில் இக்காலவரைக்குட்பட்ட மீளாய்வுகளின் பெறுபேறுகளை கவனமாக ஆராய உதவி வழங்கும் சமூகம் நாடுகிறது. நோர்வேயின் நடுவர் நிலையை முழுமையாக மதித்து, ஐக்கிய அமெரிக்கக் குடியரசு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன், இத்தேவைக்கான வழிமுறைகளை இயன்றவரை அவசரமாக ஏற்படுத்துவதற்குத் தேவைப்படும் உசாத்துணை நடவடிக்கைகளை யப்பான மேற்கொள்ளும்.

பின்தொடர் நடவடிக்கை

21. உபசரிப்பு நாடென்ற கோதாவில், இந்நாட்டின் தீர்மானங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அறிவிக்குமாறு இம்மாநாடு யப்பான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறது.

2003 யூன் 09ஆம் 10ஆம் தேதிகளில் டோக்கியோவில் நடைபெற்ற இலங்கையின் புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி பற்றிய டோக்கியோ மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகள் மற்றும் சர்வதேச ஸ்தாபனங்களின் பட்டியல்

Commonwealth of Australia
Republic of Austria
Peoples Republic of Bangladesh
Kingdom of Belgium
Federative Republic of Brazil
Brunei Darussalam
Kingdom of Cambodia
Canada
Peoples Republic of China
Kingdom of Denmark
Arab Republic of Egypt
Republic of Finland
French Republic
Federal Republic of Germany
Hellenic Greece
State of the City of Vatican
Republic of Iceland
India
Republic of Indonesia
Islamic Republic of Iran
Ireland
State of Israel
Republic of Italy
Japan
Republic of Korea
State of Kuwait
Lao Peoples Democratic Republic
Grand Duchy of Luxembourg
Malaysia
Kingdom of Nepal
Kingdom of the Netherlands
New Zealand
Kingdom of Norway
Sultanate of Oman
Islamic Republic of Pakistan
Republic of the Philippines
Portuguese Republic
Russian Federation
Kingdom of Saudi Arabia
Republic of Singapore
Republic of South Africa
Spain
Democratic Socialist Republic of Sri Lanka
Kingdom of Sweden
Swiss Confederation
Kingdom of Thailand
Ukraine
United Arab Emirates
United Kingdom of Great Britain and Northern Ireland
United States of America
Socialist Republic of Viet Nam
European Commission
Asian Development Bank
Asian Productivity Organization
Food and Agriculture Organization of the United Nations
International Committee of the Red Cross
International Federation of Red Cross and Red Crescent Societies
International Fund for Agricultural Development
International Labor Organization
International Monetary Fund
International Organization for Migration
Multilateral Investment Guarantee Agency
United Nations Secretariat
United Nations Human Settlement Programme
United Nations Development Programme
United Nations Population Fund
United Nations High Commissioner for Refugees
United Nations Children’s Fund
United Nations Educational, Scientific and Cultural Organization
United Nations Office on Drugs and Crime
United Nations World Food Programme
World Health Organization
World Bank

மூலம்:
டோக்கியோப் பிரகடனம்

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

Create a free website or blog at WordPress.com.

%d bloggers like this: