ஒரு பத்திரம்

செப்ரெம்பர் 9, 2006

சுனாமிக்கு பின்னரான தொழிற்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பொன்றை (P.Toms) தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். (MOU)

Filed under: Government of Tamil Eelam,LTTE,Politics,Sri Lanka — CAPitalZ @ 7:25 பிப


In English

முன்னுரை

2004 டிசெம்பர் 26 ஆம் திகதியன்று இலங்கையைத் தாக்கிய சுனாமி (சுனாமி முன்னொரு போதும் இல்லாத அளவில் மனித உயிர்களையும் ஆதனங்களையும் அழித்துள்ளமையாலும்:
இப்பொது அனர்த்தத்தை எதிர்கொள்வதில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய சமுதாயங்கள் அனைத்தும் மனிதாபிமான ரீதியில் ஒத்துழைக்க வேண்டிய அவசர தேவை ஒன்றுள்ளதானாலும் சுனாமியால் தாக்கப்பட்ட இலங்கையின் சகல பாகங்களுக்கும் சுனாமிக்குப் பின்னான நிதிகளின் சமமான ஒதுக்கீடு, ஏற்றுக்கொள்ளத்தகு தேவை மதிப்பீடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளதாலும் இந்த அவசரமான மனிதாபிமானத் தேவையை அங்கீகரித்து ஒத்துழைக்கும் மனப்பான்மையுடனும், அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய ஆறு மாவட்டங்களிலுள்ள கரையோர சமுதாயங்களுக்கு துரிதமான நிவாரணத்தையும் புனர்வாழ்வையும், புனரமைப்பையும் அபிவிருத்தியையும் வழங்குவதற்கும் அத்துடன் பாதிக்கப்பட்ட இடப்பரப்புகளை மீளக்கட்டியெழுப்பும் நடைமுறைக்கு வசதி வாய்ப்பளிப்பதற்கும் அதனைத் துரிதப்படுத்துவதற்கும் என இலங்கை அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் நல்லெண்ணத்துடனும் அவற்றின் முனைப்பான முயற்சிகளைப் பயன்படுத்தியும் ஒருமித்துச் செயலாற்றத் தீர்மானித்தமையாலும்:

சமதாயங்களிற்கிடையிலும் திறத்தவர்களுக்கிடையிலும் அத்தகைய ஒத்துழைப்பிற்கு வசதிவாய்பளிப்பதற்காக P-Toms ஒன்றைத்தாபிப்பதற்கான தேவையொன்றுள்ளதாலும் இப்போது, முற்போந்ததை கருத்திற் கொண்டு திறத்தவர்கள் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை செய்து கொண்டுள்ளதுடன் பின்வருமாறும் உடன்படுகின்றனர்:

1.அமைப்பு

அ. சுனாமிக்கு பின்னரான பணியைத்திட்டமிடல், நடைமுறைப்படுத்தல், இயைபு படுத்தல், ஆகிய நோக்கங்களுக்காக ஒருங்கிணைந்த தொழிற்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பொன்றை தாபிக்கப்படுதல் வேண்டும். அத்தகைய கட்டமைப்பு பின்வருவனவற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.:

1. சுனாமிக்குப் பின்னரான கரையோரப் புனரமைப்புக்குழு

2. ஆறு மாவட்டங்களுக்குமான சுனாமிக்கு பின்னான கரையோரப் புனரமைப்புக்குழு (பிராந்தியக்குழு) அத்துடன்

3. அம்பாறை, மட்டக்களப்பு, யாழப்பாணம், கிளிநொச்சி, முல்தை;தீவு, மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் சுனாமிக்குப் பி;ன்னரான கரையோரப் புனரமைப்புக் குழுக்கள் (மாவட்டக்குழுக்கள்)

ஆ. உயர் மட்டக்குழுவும் பிராந்தியக்குழுவும் மாவட்டக் குழுக்களும் சுனாமி அனர்த்த வலையமைப்பிலுள்ள (சு.அ.வ) (வு.னு.ணு) சகலரதும் துயரங்களை கருத்திற் கொள்ளக் கூடியவாறான முறையொன்றில் அவற்றின் பணிகளை நிறைவேற்றுதல் வேண்டும் என்பதுடன் இனப்பூர்வாங்கம் பால்நிலை, மொழி, மதம், அரசியல் அல்லது வேறு அபிப்பிரயாயம், சமூகப்பூர்வாங்கம், பிறப்பு அல்லது வேறு அந்தஸ்து போன்ற ஏதுக்களின் மீது எந்தவொரு நபருக்கும் எதிராக பாரபட்சமின்றி செயற்படவேண்டும்.

2. நோக்கெல்லை

அ. உயர்மட்டக்குழுவினதும் பிராந்தியக்குழுவினதும் மாவட்டக் குழுவினதும் நோக்கெல்லை முறையே பிரிவுகள் 5(அ), 6(ஆ) 8(ஆ) என்பவற்றில் வரைபிலக்கணம் கூறப்பட்ட பணிகளைப் புரிவதற்கும் பிராந்தியக்குழுக்களின் விடயத்தில் 8(அ) என்னும் பிரிவாலும் (கீழ் குறித்துரைக்கப்பட்டவாறு) பிரத்தியேகமாக ‘சு.அ.வ” விற்கும் பயனுறுவதாகவும் வரையறுக்கப்படுதல் வேண்டும்.

ஆ. சுனாமி அனர்த்த வலயம் (சு.அ.வ) சுனாமியால் பாதிக்கப்பட்ட இடப்பரப்பாக வரைபிலக்கணம் செய்யப்படுதல் வேண்டும்.

இ. ‘சு.அ.வ” ஆனது கடலையடுத்துள்ளதும் சராசரி தாழ்த்தப்பட்ட நீர்மட்டத்திலிருந்து தரை நோக்கி இரண்டு கிலோ மீற்றர் எல்லைக்குள் அமைந்துள்ளதுமான சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் எல்லாக்காணி இடப்பரப்பையும் உள்ளடக்குதல் வேண்டும்.

ஈ. உயர்மட்டக்குழு, மேலதிக காணி இடப்பரப்புகளை ‘சு.அ.வ.” வற்குள் கொண்டு வரத்தீர்மானிக்கலாம். எவ்வாறாயினும் அத்தகைய எல்லா காணி இடப்பரப்புகளும் சுனாமியால் நேரடியாக தாக்கத்திற்குள்ளாக்கப்பட்டு அல்லது சுனாமியன் விளைவாக ஆட்களின் புலம் பெயர்வினாலும் மீள் குடியேற்றத்தினாலும் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

உ. கடல் நீரால் மேவப்பட்ட கரையோர இடப்பரப்புகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய அல்லது அவற்றைப் பாதிக்கின்ற வழிமுறைகளுக்கான புதிய பிரேரணைகளை சர்வதேச முகவராண்மையொன்றில் அனுசரணையின் கீழ் பொறுப்பேற்கப்படுதல் வேண்டும். அத்தகைய வழிமுறைகள் சுனாமியின்போது கடலுக்குள் இழக்கப்பட்ட பொருட்களை மீளப்பெறுவதற்கான வழிமுறைகளையும், பாதிக்கப்பட்ட கரையோரங்களையும், கடற்கரைகளையும் கடல் நீரால் குழப்பப்பட்டிருக்கும்போது கூட துப்பரவு செய்தலையும் அத்துடன் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ள இறங்கு துறைகளை அல்லது வர்த்தக கடற்தொழில் துறைமுகங்களை பழுது பார்த்தலையும் தீர்மானித்தலையும் உள்ளடக்கக்கூடும்.

ஊ. இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையிலான 2002 பெப்ரவரி 23 எனத்தேதியிடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை முழுவலுவுடனும் பயனுறுதியுடனும் தொடர்ந்திருத்தல் வேணடும் என்பதுடன் இந்தப்புரிந்துணர்வு ஒப்பந்தத்திலுள்ள எதுவும் அத்தகைய உடன்படிக்கையை பங்கப்படத்துவதாகவோ அல்லது அதன் நியதிகளை ஏதேனும் விதத்தில் மாற்றுவதாகவோ பொருள் கொள்ளப்படுதல் ஆகாது.

3. நடைமுறையில் இருக்கும் காலப்பகுதி

அ. இப்பரிந்துணர்வு ஒப்பந்தம் இரு திறத்தவர்களாலும் அது நிறைவேற்றப்படும் திகதியிலிருந்து (‘தொடங்கும் தேதி”) வலுவுக்கு வருதல் வேண்டும் என்பதுடன் தொடங்கும் தேதியிலிருந்து ஓராண்டு காலப் பகுதியொன்றிற்கு தொடர்ந்து நடைமுறையிலிருத்தல் வேண்டும்.

ஆ. திறத்தவர்களின் உடன்பாட்டின் மூலம் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேலும் ஒரு காலப்பகுதிக்கு அல்லது காலப்பகுதிகளுக்கு நீடிக்கும் விருப்பத்தெரிவை கொண்டிருத்தல் வேண்டும்.

4. ஆகு செலவும் செலவுகளும்

P.Toms என்னும் கட்டமைப்பை தாபித்தல், அதன் செயற்பாடு என்பன தொடர்பில் ஏற்படும் எல்லா ஆகு செலவுகளையும் மற்றும் செலவுகளையும், ஏற்குமாறு உதவி வழங்குனர்கள் கேட்டுக்கொள்ளப்படுதல் வேண்டும்.

5. உயர் மட்டக்குழு

அ. புவியியல் நோக்கெல்லை
உயர் மட்டக்குழு பித்தியேகமாக ‘சு.அ.வ” தொடர்பில் செயற்படுதல் வேண்டும்.

ஆ. பணிகள்
உயர் மட்டக்குழு பின்வரும் பணிகளை புரிதல் வேண்டும்.

1. சு.அ.வ இல் உதவி வழங்குனர்களின் நிதிகளின் சமமான ஒதுக்கீட்டிற்கும் செவீட்டிற்கும், உயர்மட்டக்குழுவின் கொள்கை வகுத்தல் அதற்கு சமர்ப்பிக்கப்பட்ட தேவை மதிப்பீடுகளின் அடிப்படையிலும் பாதிக்கப்பட்ட ஆட்களின் எண்ணிக்கையினதும் சேத அளவினதும் விகிதாசாரத்தின் அடிப்படையிலும் ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும் என்ற கோட்பாட்டினால் வழிநடத்தப்படல் வேண்டும்.

2. மதியுரை சேவைகளை வழங்குதல், அத்துடன்

3. P-Toms கட்டமைப்பின் பணிகளைக் கண்காணித்தல்

இ. அமைப்பு
உயர் மட்டக்குழு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.

1. 1 இலங்கை அரசின் நியமத்தர்;.
2. 1 தமிழீழ விடுதலைப் புலிகளின் நியமத்தர்;.
3. 1 முஸ்லிம் கட்சிகளின் நியமத்தர்;.

ஈ. மாற்று நியமத்தர்கள்
பெயர் குறித்த நியமனம் செய்யும் திறத்தவர் ஒவ்வொருவரும் மாற்று நியமத்தர் ஒருவரை பெயர் குறித்தொதுக்குதல் வேண்டும். உறுப்பினர் ஒருவர் சுகயீனம் காரணமாக பிரயாணத்தின் காரணமாக அல்லது வேறு காரணமாக அவசியம் காரணமாக அல்லது வேறு அவசிய சூழ்நிலை காரணமாக சமூகமாயிருக்க இயலாதிருக்கும் பட்சத்தில் மாத்திரம் கூட்டங்களுக்குச் சமூகம் அளிப்பதற்கும் உறுப்பினரின் சார்பில் செயலாற்றுவதற்கும் அதிகாரமளிக்கப்படுவார்.

உ. தவிசாளர்
உயர்மட்டக்குழு தவிசாளராகச் சேவையாற்றுவதற்கும் அதன் கூட்டங்களை நடத்துவதற்கும் இசைவு படுத்துவதற்கும் உயர்மட்டக்குழுவின் உறுப்பினர்களுள் ஒருவரை தெரிவு செய்தல் வேண்டும். தவிசாளரான ஒவ்வொருவரும்; இரண்டு மாதங்களுக்கு சேவையாற்றிய பின்னர் தலைமை வகிக்கும் பணி உறுப்பினர்களிடையே சுழற்சி முறையில் வருதல் வேண்டும்.

ஊ. பார்வையாளர்கள்
உயர்மட்டக்குழுக் கூட்டங்களுக்கு பார்வையாளராக பலதரப்பு உதவி வழங்குனர்களையும், இருதரப்பு உதவி வழங்குனர்களையும், பிரதிநிதித்துவப்படுத்தும் ஒவ்வொருவரைக் கொண்டிருத்தல் வேண்டும். பார்வையாளர்கள் முறையே பல தரப்பு உதவி வழங்கும் சமுதாயத்தினாலும் பெயர் குறித்த நியமிக்கப்படுதல் வேண்டும்.

எ. முடிவெடுத்தல்
1. உயர்மட்டக்குழு உடன்பாட்டின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க முயலுதல் வேண்டும். உயர் மட்டக்குழு எந்தவொரு முடிவுகளையும் எடுக்க முன்னர் எல்லா உறுப்பினர்களும் நல்லெண்ணத்துடன் ஒருமித்து பணியாற்றி பொது உடன்படிக்கை ஒன்றை எய்துவதற்கு தங்களது முனைப்பான முயற்சிகளைப் பயன்படுத்துதலும் வேண்டும்.

2. உடன்பாட்டை எய்த முடியாத பட்சத்தில் உறுப்பினர்கள் உயர்மட்டக்குழுவில் தொடர்ந்தும் ஒத்தழைப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் உடனடியாக அவர்களை நியமனம் செய்யும் திறத்தவர்களுடனும் விரிவான கலந்தாலோசனை நடைமுறை ஒன்றில் ஈடுபடுதல் வேண்டும்.

3. அப்போதும் உடன்பாட்டை எய்த முடியாத பட்சத்தில் நியமனம் செய்யும் திறத்தவர்கள் பிரிவு 5(ஏ,1 மற்றும் 2) என்பதில் விதிந்துரைக்கப்பட்ட கலந்தாலோசனை நடைமுறையை பின்பற்றியதன் பின்னரும் 14 நாள் முன்னறிவித்தலை கொடுத்ததன் பின்னரும் உயர் மட்டக்குழுவின் ஒத்தழைப்பை இடைநிறுத்தல் செய்யலாம்.

ஏ. அமைவிடம்
உயர்மட்டக்குழு கொழும்பில் அமைந்திருத்தல் வேண்டும்.

ஐ. நடவடிக்கை முறைகள் உயர்மட்டக்குழு அதன் பணிகளை நிறைவேற்றுவதற்கு அதன் சொந்த நடவடிக்கை முறைகளை தீர்மானித்தல் வேண்டும்.

ஓ. சேவையாற்றும் செயலகம்
உயர்மட்டக்குழு போதியளவு பணியாட் தொகுதியினருடன் சிறிய, சுயேச்சையான செயலகம் ஒன்றை ஸ்தாபித்தல் வேண்டும்.

6. பிராந்தியக்குழு

அ. புவியியல் நொக்கெல்லை:
பிராந்தியக்குழு பிரத்தியேகமாக ஆறு மாவட்டங்களிலுமுள்ள சு.அ.வ. வின் இடப்பரப்புக்கள் செயலாற்றுதல் வேண்டும்.

ஆ. பணிகள்:
பிராந்தியக்குழு பின்வரும் பணிகளைப்புரிதல் வேண்டும்.

1. சுனாமிக்கு பின்னரான அவசர கால நிவாரணம், புனர்வாழ்வு, புனர்நிர்மானம், அத்துடன் அபிவிருத்தி வழிமுறைகளை நடைமுறைப்படுத்தவதற்கும் அவற்றிற்கு முன்னுரிமை அளிப்பதற்கும் ஆன தந்திரோபாயங்களை விருத்தி செய்தல்.

2. சுனாமிக்கு பின்னரான நிவாரணம், புனர்வாழ்வு, புனர்நிர்மானம், அத்துடன் அபிவிருத்தி என்பவற்றுக்கான கருத்திட்டங்கள் தொடர்பான கருத்திட்ட அங்கிகாரமும் முகாமைத்துவமும்.

3. கருத்திட்டங்களின் முழுமையான கண்காணிப்பு,அத்துடன்,

4. பிரிவு 7 இல் குறித்துரைக்கப்பட்டவாறு வரைவிலக்கணம் கூறப்பட்ட நிதி தொடர்பில் நிதி முகாமைத்துவம்.

இ.
அமைப்பு
பிராந்தியக்குழு பின்வரும் உறுப்பினர்களை கொண்டிக்கவேண்டும்.

1. இலங்கை அரசாங்கத்தினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் 2 உறுப்பினர்களில் ஒருவர் பிரதித்தவிசாளராக செயலாற்றுவார்.

2. தமிழீழ விடுதலைப் புலிகளினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் 5 உறுப்பினர்களில் ஒலுவர் தவிசாளராக செயலாற்றுவார்.

3. முஸ்லிம் கட்சிகளால் பெயர் குறித்து நியமிக்கப்பட்ட 3 உறுப்பினர்களில் ஒருவர் பிரதித்தவிசாளராக சேவையாற்றுவார்.

4. பிராந்தியக்குழு தகுந்த ஆண், பெண் சமநிலை ஒன்றைக் கொண்டிருத்தல் வேண்டும்

ஈ. பார்வையாளர்கள்
பிராந்தியக்குழு அதன் கூட்டங்களுக்கு சமுகமளிப்பதற்கு பலதரப்பு உதவி வழங்குனர்களை பிரதிநிதித்தவப்படுத்தும் பார்வையாளர் ஒருவரையும் இருதரப்பு உதவி வழங்குனர்களை பிரதிநிதிப்படுத்தும் பார்வையாளர் ஒருவரையும் கொண்டிருத்தல் வேண்டும். பார்வையாளர்கள் முறையே பல தரப்பு உதவி வழங்கும் சமுதாயத்தினாலும் பெயர் குறித்து நியமிக்கப்பட வேண்டும். ஏனைய பார்வையாளர்கள் பிராந்தியக்குழுவின் கூட்டத்திற்கு சமுகமளிப்பதற்கு அழைக்கப்படலாம்.

உ. முடிவெடுத்தல்.
1. பிராந்தியக்குழ உடன்பாட்டின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க முயலுதல் வேண்டும். பிராந்தியக்குழு எவையேனும், முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் எல்லா உறுப்பினர்களும் நல்லெண்ணத்துடன் ஒருமித்துப் பணியாற்றுதலுக்கும் பொது உடன்படிக்கை ஒன்றை எய்துவதற்கும் தங்களது முனைப்பாக முயற்சிகளை பயன்படுத்துதல் வேண்டும்.

2. உடன்பாட்டை எய்த முடியாத பட்சத்தில் பிராந்தியக்குழுவின் சாதாரண பெரும்பான்மையொன்றினால் முடிவுகள் எடுக்கப்படுதல் வேண்டும்.

3. எவ்வாறிருப்பினும் சிறுபான்மைக் குழுவொன்றின் மீது பாதிப்பினை ஏற்படுத்தும் பிரச்சினை ஒன்றின் மீது பிராந்தியக்குழுவின் குறைந்த பட்சம் 2 உறப்பினர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பின் முடிவொன்று எடுக்கப்படும் பட்சத்தில் பிராந்தியக்குழுவின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அங்கீகாரம் (7 உறுப்பினர்கள்) தேவைப்படும்.

4. மாவட்டக்குழுவொன்றின் பிரேரணை ஒன்றிற்கு பிராந்தியக்குழுவின் சாதாரண பெரும்பான்மையொன்று கிடைக்காத பட்சத்திலும் அத்துடன் பிரேரணை தொடர்பிலான முடிவை சீராக்குமாறு பிராந்தியக்குழுவின் குறைந்தபட்சம் இரண்டு உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் நிராகரிப்பிற்கு பிராந்தியக்குழுவில் மூன்றில் இரண்டு பெரும்பானமை அங்கிகாரம் (7 உறுப்பினர்கள்) தேவைப்படும்.

ஊ. அமைவிடம்
பிராந்திக்குழு கிளிநொச்சியில் அமைந்திருத்தல் வேண்டும்.

எ. நடவடிக்கை முறைகள்
பிராந்தியக்குழு அதன்பணிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை முறைகளை உயர்மட்டக்குழுவுடனான கலந்தாலோசனையுடன் தீர்மானித்தல் வேண்டும்.

ஏ. சேவையாற்றும் செயலகம்
ஆறு மாவட்டங்களக்குமான சிறிய செயலகம் ஒன்று நிறுவப்படுதல் வேண்டும் என்பதுடன் உடனடி மனிதநேய மற்றும் புனர்வாழ்வுத் தேவைகளுக்கான செயலகத்திலிருந்து (உ.ம.பு.தே.ச.-ளுஐர்சுN) பணியாட் தொகுதியினர் பெறப்படலாம். இச்செயலகம் சுனாமிக்கு பின்னரான கரையோர புனர்நிர்மான அபிவிருத்தி பிராந்திய செயலகம். (சு.பி.பு.ச.பி.செ.(சுளுPஊசுனு) எனப்பெயரிடப்படல் வேண்டும் என்பதுடன் பிராந்தியக்குழுவிற்கு செயலக நிர்வாக சேவைகளை புரிததலும் வேண்டும்.

ஐ. கருத்திட்ட முகாமைத்தவக் கூறு
பிராந்தியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட முகாமைத்துவக்குழுவொன்று (க.மு.க. (Pஆரு) தாபிக்கப்படுதல் வேண்டும்.

ஒ. கணக்கீடு பிராந்தியக்குழு பொருத்தமான தகமை பெற்ற சுயேட்சையான கணக்காளர் ஒருவரை நியமித்தல் வேண்டும்.

7. பிராந்திய நிதியம்

அ. ஆறு மாவட்டங்களுக்கும் குறித்துரைக்கப்படாத (நிகழ்ச்சித் திட்ட நிதிகளையும் செயலக நிதிகளையும் கொண்ட சுனாமிக்கு பின்னரான கரையோர நிதியம் ஒன்றிருத்தல் வேண்டும். (பிராந்திய நிதியம்) குறித்துரைக்கப்படாத (நிகழ்ச்சி திட்டம்) நிதிகள் பிரத்தியேகமாக வெளிநாட்டு நிதிகளை கொண்டீருக்க வேண்டிய அதே வேளையில் செயலக நிதிகள் வெளிநாட்டு நிதிகள் உள்ளூர் நிதிகள் ஆகிய இரண்டையும் கொண்டிருத்தல் வேண்டும்.

ஆ. திறத்தவர்கள் பிராந்திய நிதியத்தின் சட்டக்காப்பாளராக இருப்பதற்கென பொருத்தமான பல தரப்பு முகவர் ஒருவரை நியமித்தல் வேண்டும்.

இ.
பிராந்திய நிதியத்தின் நோக்கம் ஆறு மாவட்டங்களினதும் சுனாமியால் பாதிக்கப்பட்ட இடப்பரப்புக்களில் நிவாரண, புனர்வாழ்வு, புனர்நிர்மான, மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு நிதி வசதியளிப்பதற்கும், அதனைத் துரிதப்படுத்தவதற்கும் தகுந்த அங்கிகரிக்கப்பட்ட நடைமுறைகளின் படி நிதிகளை துரிதமாக கிடைக்கச்செய்வதாகும்.

ஈ. திறத்தவர்களும் சட்டக்காப்பாளர்களும் பிராந்திய நிதியத்தில் தாபிப்பதற்கும் தொழிற்படுவதற்குமான கட்டமைப்பு முறையொன்றின் மீது உடன்படுதல் வேண்டும்.

8. மாவட்டக்குழுக்கள்

அ. புவியில் நொக்கெல்லை.
மாவட்டக்குழு ஒவ்வொன்றும் பிழரத்தியேகமாக தத்தமத மாவட்டத்திற்குட்பட்ட ச.அ.வ. இடப்பரப்புக்கள் தொடர்பில் செயலாற்றுதல் வேண்டடும்.

ஆ. பணிகள்
மாவட்டக்குழு ஒவ்வொன்றும் அதன் மாவட்டத்திற்குள் பின்வரும் பணிகளை நிறைவேற்றுதல் வேண்டும்.

1. தேவைகளை இனம் காணுதல்

2.
தேவைகளை முன்னுரிமைப்படுத்தல்

3. பல்வேறு பங்காளிகளிடமிருந்தும் கருத்திடப் பிரேரணைகளை பிறப்பித்தலும். பெறுதலும், கணிப்பீடு செய்தலும், முன்னுரிமைப்படுத்தலும், அத்துடன் பிராந்தியக்குழுவிற்கு விதப்புரைகளைச் சமர்ப்பித்தலும்.

4. கரத்திட்டத்தின் முன்னேற்றத்தை கண்காணித்தலும் அதனைப்பற்றி பிராந்தியக்குழுவிற்கு அறிக்கையிடுதலும்.

இ. அமைப்பும் முடிவெடுத்தலும்.
ஏற்கனவே தாபிக்கப்பட்ட நன்கு பணியாற்றும் மாவட்டக்குழுக்கள் அவற்றின் பணிகளைத ;தொடருதல் வேண்டும். மாவட்டக்குழுக்கள் அவற்றின் அமைப்பு மற்றும், முடிவெடுத்தலும் தொடர்பிலான பிரச்சினைகளை மேலும் கலந்துரையாடி அவற்றின் மீது முடிவெடுக்கலாம். போதியளவிலான முஸ்லிம் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்படவேண்டும். மாவட்ட குழு தகுந்த ஆண் பெண் சமநிலையையும் கொண்டிருக்க வேண்டும்.

ஈ. அமைவிடம்:
மாவட்டக்குழு ஒவ்வொன்றும் அதன் மாவட்டத்திற்குள் அமைந்திருத்தல் வேண்டும்.

உ. சேவையாற்றும் செயலகம்
சிறிய சேவையாற்றும் செயலகம் ஒன்று மாவட்டக்குழுக்குளுக்கு செயலக நிர்வாக சேவைகளை வழங்க வேண்டும்.

9. நிறைவேற்றுகை
இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் இணைப்புப் பிரதிகளில் நிறைவேற்றப்படலாம். 2 வாசகங்களும் சமமான சான்றுறுதி கொண்டவையாகும்.

மூலம்:

சுனாமி ஒப்பந்தம்

Advertisements

1 பின்னூட்டம் »


RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: