ஒரு பத்திரம்

செப்ரெம்பர் 28, 2006

உருவாகும் தமிழீழத் தேசமும் அதன் உட்கட்டுமானமும்

Filed under: Uncategorized — CAPitalZ @ 9:00 முப

உருவாகும் தமிழீழத் தேசத்தின் உட்கட்டுமானப் பணிகளைப் பற்றிய ஒரு பார்வையே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். மலரும் தமழீழத்தின் முதற்கட்டமாக அதன் கட்டுமான பணிகள் எப்படி அமையப்பெறும் என தமிழீழப் பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தினரால் அந்த திட்டத்திற்காக ஒரு ஆரம்ப வரைபு இவை. அந்த ஆரம்ப வரைபின் தமிழீழ கட்டுமானம் எப்படி அமையும் எனப் பார்த்தால் அந்த கட்டுமானத்தை எட்டுப் பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவை முறையே

1) நகரங்கள்
2) தெருக்கள், இரும்பு பாதைகள், விமான நிலையங்கள்.
3) கடற் போக்குவரத்தும் துறை முகங்களும்.
4) மின்சாரம்.
5) தொலை தொடர்பு.
6) நீர்ப்பாசனம். நீர் முகாமைத்துவம்.
7) கைத்தொழில்
8) நீர்வழங்கலும் வடிகால் அமைப்பும்.

எனப் பிரிக்கப்பட்டு தமிழீழத் தேசத்தின் எல்லைகள் தெளிவாக தெரிந்து இருப்பதனால் மாவட்ட எல்லைகளையும் நிர்ணயித்து மாநிலங்களின் வளர்ச்சிகள் அனைத்தும் சமமானதாகவும் சீரானதாகவும் எல்லா பிரதேசங்களிடையேயும் சீரானதாகவும் எவ்வித வேறுபாடுகளும் இல்லாதவாறு எல்லா வளங்களும் கடல், விவசாயம். கைத்தொழில் என்பன எல்லாப் பிரதேசங்களிற்கும் அமையப்பெறக் கூடியதாக இருக்கும்.

மாநிலங்களை வகுக்கும் போதும் அவற்றின் எல்லைகளை நிர்ணயம் செய்யும் போதும் கூடியளவு புவியியல் சார் பொளதீக அம்சங்களிற்கு அமைய அதாவது ஆறுகள், ஏரிகள், கடனீரேரிகள் என்பனவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கப்படும். புதிய மாநிலங்கள் உருவாகும் போது தமிழீழத்தின் எதிர்கால தேசியத் தேவைகளிற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தமிழீழ நிர்வாக வலையங்கள்

தமிழீழத்தில் மொத்தமாக இருபது மாநிலங்களாக பிரிக்கப்பட்டு அவை ஒவ்வொன்றின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளன. தமிழீழ மாநிலங்களின் (மாவட்டங்கள் ) ஆட்சிப் பிரதேங்கள் தற்போதைய மாவட்ட ஆட்சிப் பிரதேசங்களை விட சிறியதாயினும் உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் பாரக்க பெரியனவாகும்.

தமிழீழத் தேவைகள் மற்றும் இலக்குகள் என்பனவற்றின் அடிப்படையைப் பொறுத்து யாழ் மாவட்டம் இரண்டாகவும், கிளிநொச்சி மாவட்டம் மூன்றாகவும், மன்னார் மாவட்டம் இரண்டாகவும், புத்தளம் மாவட்டம் மூன்றாகவும், திருகோணமலை மாவட்டம் மூன்றாகவும், மட்டகளப்பு மாவட்டம் மூன்றாகவும், அம்பாறை மாவட்டம் இரண்டாகவும் பிரிக்கப்பட்டு வவுனியா மற்றும் முல்லைதீவு மாவட்டங்களிலிருந்து மாங்குளம் பிரிக்கப்பட்டு தனிமாநிலமாக உருவாகும்.

யாழ்ப்பாணக் குடாநாடு இயற்கையாகவே தொண்டமனாறு மற்றும் நாவற்குழி நீரேரிகளால் வலிகாமம் பிரதேசத்திலிருந்து தென்மராட்சி மற்றும் வடமராட்சி பிரதேசங்கள் பிரிக்கபடுகின்றன. இதனடிப்படையில் யாழ்குடாநாடு இரண்ட மாநிலங்களாகப் பிரிக்கபடும். அவை முறையே

1) நல்லூர் மாநிலம்:- இப்பகுதியில் தற்போதைய வலிகாமும் தீவகமும் அடங்கும் இங்கு சனத்தொகை அதிகமாக இருப்பதோடு வளமான செம்மண்ணும் உண்டு.

2) வறணி மாநிலம்:- இப்பகுதியில் வடமராட்சி தென்மராட்சி பச்சிலைப்பள்ளி பிரதேசங்கள் அடங்கும். இங்கு சனத்தொகை குறைவாகவே காணப்படுகிறது.
தென்மராட்சியில் நெற்பயிர்ச்செய்கை வளமாக உள்ளதோடு பளைப்பிரதேசத்தில் தென்னைப்பெருத்தோட்டப் பயிர் வளம் அதிமாக உற்பத்தி செய்யலாம். வடமராட்சி பகுதிகளில் கடல் வளமும் மற்றும் வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் கடல் வளத்தை மேலும் திட்டமிட்டு அபிவிருத்தி செய்யலாம். வறணி நிர்வாக பிரதேசத்தில் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களும் புதிய அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்த போதிய நில வளமும் வசதிகளும் உள்ளன.

3) கரைச்சி மாநிலம் :- இது கிளிநொச்சி பரந்தன் வட்டக்கச்சி பகுதிகளை உள்ளடக்கியது. இதன் வடக்கு எல்லையாக யாழ்குடா நீரேரியுள்ளது. விவசாயம் இப்பிரதேசத்தின் பிரதான வளமாகும்.

4) பூநகரி மாநிலம்:- இதன் மேற்கு எல்லை மன்னார் வளைகுடாவாகும். பூநகரிப் பெருநிலப் பரப்பு எங்கள் ஆதிக் குடியிருப்புக்கள் காணப்பட்ட பிரதேசமாகும். இங்கு நெற்செய்கை பிரதானமாகும் அத்துடன் தமிழர் பாரம்பரியம் பற்றிய அகழ்வாராச்சிகள் மேற்கொள்ள வேண்டிய பிரதேசமுமாகும்.

5) முல்லைதீவு மாநிலம்:- இது முன்னைய முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும் பகுதியை கொண்டதாகும் இதில் மணலாறுப் பிரதேசமும் அடங்கும். இதன் கிழக்கு கரையோரம் வங்காள விரிகுடாவாகும். கடல்வளம் விவசாய வளம் என்பன இப்பகுதியின் பிரதான வளங்களாகும்.

6) மாங்குள மாநிலம்:- இது தற்போதைய முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, மற்றும் வவுனியா மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாகும். வடமாகாணத்தின் பிரதான நிர்வாக மையம்(மாநகரம்) மாங்குளத்தில் அமையும். எனவே இதனைக் கருத்திற் கொண்டு இப்பிரதேசம் பரப்பளவில் பெரிதாக அமையுமாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இங்கு ஒரு குறிப்பு மாங்குளத்தை மாநகரமாக அமைப்பதற்கான தொடர்ச்சியான ஆராச்சிகள் இடம்பெற்று சில முரணான தரவுகளும் கிடைக்கபெற்றள்ளது அவை போதியளவு நீர்வளமின்மை மற்றும் வளமான காடுகள் அழிக்கபடவேண்டிய அபாயமும் ஏற்படலாம் என்று அத்தரவுகளால் தெரிய வருவதனால் அவை உறுதிப்படுத்துமிடத்து வடமாநிலத்தின் தலைநகர் முறிகண்டியில் அல்லது கொக்காவிலிற்கு மாற்றப்படலாம்.

7) மன்னார் மாநிலம்:- மன்னார் மாவட்டம் மாந்தை மற்றும் மடு என்று இரண்டு நிருவாக பிரதேசமாக பிரிக்கப்பட்டுள்ளது .

8) மாந்தை மாநிலம்:- இது மன்னார். தலை மன்னார். திருக்கேதீஸ்வரம் .கட்டுக்கரை குளம் .என்பனவற்றை உள்ளடக்கும்.இங்கு நெற்செய்கை மற்றும் கடல் வளம் தரமான களிமண் வளமும் உண்டு.

9) மடு மாநிலம்:- இப்பகுதி பிரதானமாக காடுகளை பேணும் இடமாகவும் மிருகங்கள் மற்றும் பறைவைகள் சரணாலயமாக பேண படும் அதைவிட புகழ்பெற்ற மடுமாதா ஆலயமும் இங்கு அமைந்திருப்பது இந்த பகுதிக்கு முக்கியத்துவத்தை கொடுப்பதாகும்.

10) வவுனியா மாநிலம்:- இப்புதிய மானிலம் கால்நடை அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளிக்கபடும் அத்துடன் விவசாயம்

11) திருகோணமலை மாநிலம்:- தமிழீழத்தின் தலைநகராக் இப்பிரதேசம் அமையும் எனவே தமிழீழத்தின் நிர்வாக பிரதேசமாக இப்பகுதி அமைவதுடன் அயற்பகுதிகளான சீனன் குடா மற்றும் தம்பலகாமம் பகுதிகளிற்கும் தலைநகர் அபிவிருத்தி விரிவடையும்.

12) குச்சவெளி மாநிலம்:- இது தற்போதைய வட திருகொணமலை மாவட்டத்தில் இது அடங்கும் இதன் வட எல்லை முல்லை _திருகோணமலை எல்லைகளாகும். தெற்கு எல்லை கொறவப்பொத்தானை நெடுஞ்சாலையும் நிலாவெளியும் ஆகும்.

13) மூதூர் மாநிலம்:- இதன் எல்லைகளாக மகாவலிகங்கையாகவும் மற்ற எல்லைகள் தற்போதைய திருகோணமலை மற்றும் மட்டு எல்லைகளாகும். இப்பிரதேசம் விவசாயம் மற்றும் கடல் என்பன இதன் பிரதான வளங்களாகும்.

14) மட்டகளப்பு மாநிலம்:- இதன்கீழ் முதலாவதாக வாகரை மானிலம். இது புதிய நிருவாக பிரதேசம் ஆகும் இது பெரிய நீர் பரப்புடையதாகவும் தற்போதைய தற்போதைய மட்டகளப்பு மாவட்டத்தின் வடபகுதியாக இது அமைவதுடன். இதன் தெற்கு எல்லை முகுந்தன் ஆறு ஆகும்.

15) அம்பாறை மாவட்டம்:- இது சமநிலபரப்புடையதாக இரண்டாக பிரிக்கபடும்
(1) அக்கரைப்பற்று மாநிலம்
(2) பொத்துவில் மாநிலம்
இங்கு நெற்செய்கையும் விலங்கு வேளாண்மையும் பிரதானமாகும். வல்லவெளி பிரதேசம் தற்போதைய அம்பாறை மற்றும் மட்டகளப்பு மாநிலங்களின் பகுதிகளில் அடங்கும் . மட்டகளப்பின் தெற்கு எல்லை பிரதேசமாக செனத்தொகை அதிகம் கொண்ட பட்டிருப்பு பிரதேசம் அமையும்.

16) புத்தளம் மாவட்டம்:- புத்தளம் மாவட்டம் மூன்றாக பிரிக்கபடும் அவை
(1) அறுவாக்காடு மாநிலம்
(2) புத்தளம் மாநிலம்
(3) சிலாபம் மாநிலம்
எனப் பிரிக்கபட்டு இங்கு நெற்செய்கை மற்றும் கடல் வளங்கள் அபிவிருத்தி செய்யப்படும்

தொடரும் ……………..

ஆக்கம் :: சாலினி சாத்திரி

மூலம்:

உருவாகும் தமிழீழத் தேசமும் அதன் உட்கட்டுமானமும்

Advertisements

பின்னூட்டமொன்றை இடுங்கள் »

இன்னமும் ஒரு பின்னூட்டமும் இல்லை

RSS feed for comments on this post. TrackBack URI

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.

%d bloggers like this: